Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

ராஜஸ்தானில் பன்றி காய்ச்சல் : 34 பேர் பலி..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ராஜஸ்தானில் பன்றி காய்ச்சல்
ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகியுள்ளனர் என மாநில மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரி இன்று கூறியுள்ளார்.

இதற்காக மாநிலத்தில் 2 ஆயிரம்  பேரிடம் இருந்து ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டன.  அவற்றில் 162 பேருக்கு எச்.1.என்.1. வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.  அவர்களில் 34 பேர் பலியாகி விட்டனர்.

ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் 15 பேரும், அஜ்மீர் நகரில் 4 பேரும், பரத்பூர், சுரு, ஹனுமன்கார்ஹ் மற்றும் ஆழ்வார் உள்ளிட்ட பிற நகரங்களில் 2 பேரும் பலியாகி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில மருத்துவ மற்றும் சுகாதார துறை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்த வருடம் எடுத்துள்ளது.  

திறம்பட்ட கண்காணிப்பு, நோயாளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை மாநில துறையின் முக்கிய கருத்துருக்களாக உள்ளன என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து