Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

பாடகியானதுடன் கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டும் நித்யா மேனன்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
பாடகியானதுடன் கதை எழுதுவதிலு
”ஓ காதல் கண்மணி” நடிகை நித்யா மேனன் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் பாடகியாகவும் மாறியதுடன் தற்போது கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.

ஷூட்டிங்கில் பங்கேற்கும்போது ஓய்வு நேரம் கிடைத்தால் உடனே பேனாவும், கையுமாக உட்கார்ந்து கையோடு எடுத்து வரும் நோட்டில் எழுதத் தொடங்கி விடுகிறார்.

இயக்குனர் ஆகும் கனவுதான் நித்யாவை இப்படி ஆட்டிப் படைக்கிறதாம். தான் நடிக்கும் படப்பிடிப்பில் இயக்குனர்களின் அணுகு முறைகளை கூர்ந்து கவனிப்பதுடன் பட தயாரிப்பு பற்றிய நுணுக்கங்களையும் விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டறிகிறார்.

நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நித்யா மேனன் இயக்குனர் ஆவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்று சிலர் கூறினாலும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வரும் ஆண்டிலேயே இயக்குனர் பொறுப்பு ஏற்க திட்டமிட்டுள்ளதாக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரேவதி, ஷிறீ பிரியாவை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கிறார் நித்யா. ஷிறீ பிரியா நடிப்பதை நிறுத்திவிட்டார்.

ரேவதியும் 2 வருடத்துக்கு ஒரு படம் என்ற கணக்கில் நடிக்கிறார். ஏற்கனவே சுதீப்புடன் நித்யா இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார்.

இதனால் எந்த நேரத்திலும் நித்யா மேனன் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு இயக்குனராக மாறுவார் என்று கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து