Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

திரையுலகில் போராடி தெளிவு பெற்றேன் : பிரியா ஆனந்த்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
திரையுலகில் போராடி தெளிவு
வை ராஜா வை, அரிமா நம்பி, திரிஷா இல்லனா நயன்தாரா படங்களில் நடித்த பிரியா ஆனந்த் தற்போது முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன் என 2 படங்களில் நடிக்கிறார்.

அடுத்து கன்னடம், மலையாளத்தில் புனித் ராஜ்குமார், பிருத்வி ராஜ் படங்களில் நடிக்கிறார். இரு மொழிகளிலும் இப்படங்கள் மூலம் அறிமுகமாகிறார்.

வெவ்வேறு மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே பிரியாவை பல மொழிகளில் நடிக்க தூண்டி இருக்கிறதாம்.

இதுபற்றி பிரியா ஆனந்த் கூறும்போது :-

"சினிமாவில் அறிமுக கட்டத்தில் போராட வேண்டி இருக்கும் பிறகு புரிதல் ஏற்படும் எல்லாமே புதுமையாகவும், பரவசமாகவும் தென்படும். 

குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு திரையுலகம் எப்படி சுழல்கிறது என்ற தெளிவு பிறக்கும். தேக்கமாக தெரிந்த விஷயங்களிலும் படிப்பினை கிடைக்கும். மலையாளம், கன்னடத்தில் அறிமுகமாகிறேன்.

என் சொந்த காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டும் எனக்கு தெரிந்த மொழி கிடையாது. ஆனால் இரண்டையும் கற்றுக்கொள்வேன்.

அரங்கில் இருக்கும்போது மொழியை புரிந்துகொண்டு நடிப்பதற்கு உதவுவதாக இரண்டு இயக்குனர்களும் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் அதைவிடவும் தெளிவாக என்னால் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

30 நாட்கள் ஒவ்வொரு பட யூனிட்டிலும் நான் பங்கேற்றால் என்னால் எல்லாவற்றையும் சமாளித்துவிட முடியும்" என்றார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து