Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 30 பேர் பலி - 50 பேர் படுகாயம்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
சோமாலியாவில் தற்கொலைப்படை
சோமாலியா நாட்டின் பைடோவா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை மனிதகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் மொகடிஷுவில் இருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 50 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து