Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

பாரீசின் வாடகை வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் : அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
பாரீசின் வாடகை வீட்டில்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள Palaiseau என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாரீஸ் நகரில் Airbnb என்ற இணையத்தளம் மூலம் வாடகை வீடுகளை பதிவு செய்துக்கொண்டு வசிக்கலாம்.

இதுபோன்ற ஒரு வீட்டை நண்பர்கள் சிலர் வார இறுதி நாளை கொண்டாடுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

வீட்டை பதிவு செய்த பிறகு, கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு நண்பர்கள் உற்சாகமாக சென்றுள்ளனர்.

வீட்டில் நுழைந்தவுடன், பின்பக்கத்தில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் பலத்த சந்தேகம் அடைந்த நண்பர்கள் வீட்டிற்கு பின்னால், சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலத்தை சோதனை செய்தபோது, அது மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், இந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என உடனடியாக பொலிசாரால் கூற முடியவில்லை.

பெண் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சடலத்தை கண்டுபிடித்த நண்பர்கள் குழு மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட நிறுவன ஊழியர்களை தற்போது பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து