Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

ரஷ்யாவில் குழந்தையின் தலையை வெட்டி கையில் பிடித்துக்கொண்டு வீதியில் நடந்த பெண்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ரஷ்யாவில் குழந்தையின்
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள வீதி ஒன்றில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுடன் பெண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.

பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை மடக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது, திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் காட்டியுள்ளார்.

"உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள குண்டுகளை வெடிக்க செய்வேன்" என மிரட்டியதால் பொலிசார் அச்சத்தில் விலகி ஓடியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, கையில் குழந்தையின் தலையை பிடித்தப்படி ‘அல்லாஹு அக்பர்’ என கத்திக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துச்சென்றுள்ளார்.

மறைந்திருந்த பொலிசார் அதிரடி திட்டம் வகுத்து உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர்.

பின்னர், பெண்ணின் இருப்பிடத்திற்கு பொலிசாரை அனுப்பியபோது அங்கு வீடு தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்துள்ளது.

தீயை அணைத்துவிட்டு உள்ளே சோதனை செய்தபோது, தலையில்லாத அந்த குழந்தையின் உடலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்தபோது, குழந்தையின் பெற்றோர் வெளியே செல்லும் வரை காத்திருந்து விட்டு, பின்னர் அந்த குழந்தையை கொன்று வீட்டிற்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட 32 வயதான அந்த பெண் மத்திய ஆசிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்ததை தொடர்ந்து, எதற்காக இந்த கொலையை செய்தார் என்பது குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து