Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞர் கைது..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ஐந்து வயது சிறுமியை முத்தமிட
ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் யாழ். - சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில், சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் வைத்து அவரை சந்தேகநபர் முத்த மிட்டதை அயல் வீட்டுக்காரர்கள் கண்டு சிறுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தாயார் நேற்று இரவு 07.00 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். 

பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து