Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

நடிகை மேக்னா ராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் : வாலிபர் புகார்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
நடிகை மேக்னா ராஜ் என்னை
தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை மேக்னா ராஜ் மீது தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பெங்களூரு நகர மாநகர கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் மேக்னா ராஜூம், நானும் பெங்களூருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

சில நாட்கள் கணவன், மனைவியாக வாழ்த்து வந்தோம். அதன் பின்னர் தனக்கு படப்பிடிப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்ற அவர், என்னை கணவனாக ஏற்று கொள்ள மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுத்து, மேக்னாவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், அந்த வாலிபரிடம் மேக்னாவை திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தெரியவந்தது. எனவே பொலிசார் இந்த வழக்கை நிராகரித்துள்ளனர்.

இது குறித்து மேக்னாவின் தாயும், தமிழ் திரைப்பட நடிகையுமான பிரமிளா கூறுகையில், எனது மகள் மீது வாலிபர் ஒருவர் அளித்துள்ள புகார் குறித்து இதுவரை எனக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

பொலிசார் இது தொடர்பாக எங்களிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை.

வாலிபரின் நடவடிக்கை பார்க்கும்போது, திரைப்பட துறையில் இருக்கும் யாரோ அவரை தூண்டிவிட்டு, புகார் அளிக்க செய்துள்ளனர்.

தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் நடித்துள்ள எனது மகள் மீது இதுவரை எந்தவிதமான கரும் புள்ளியும் இல்லை.

அந்த வாலிபருக்கு தண்டணை வழங்கும்வரை நான் ஓயமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.சி.பி லோகேஷ் குமார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகை மேக்னா ராஜ் மீது மாநகர கமிஷனருக்கு இமெயிலில் வாலிபர் ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார்.

முதல் கட்ட விசாரணையில் அவர் தமிழக தர்மபுரியை சேர்ந்த ஜனார்த்தன் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

மேலும் திருமணமான பதிவாளர் அலுவலகத்தில் வாங்கிய சான்றிதழ், மற்றும் ஏதேனும் போட்டோக்கள் உள்ளதா என கேட்ட போது இல்லை என்று பதில் கூறிவிட்டார். எனவே வழக்கு நிராகரிக்கப்பட்டு விட்டது.

அந்த வாலிபர் மீது மேக்னாவின், பெற்றோர் புகார் அளித்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து