Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் குறைந்து வரும் பூமி சுற்றும் வேகம் : விஞ்ஞானிகளின் புதிய தகவல்..!

[ திங்கட்கிழமை, 14 டிசெம்புர், 2015, ]
கடல் நீர்மட்டம் அதிகரிப்பால்
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என, கணக்கிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து