Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

பூமியில் நாம் வாழ வேண்டுமானால் கடலில் நுண்ணுயிர்கள் வாழ வேண்டும் : ஆய்வில் தகவல்..!

[ வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர், 2015, ]
பூமியில் நாம் வாழ வேண்டுமானா
கடல் நீரில் வசிக்கும் உயிர்களில் உணவுச் சங்கிலியில் கடைசி கட்டத்தில் இருக்கும், "பிளான்ங்டன்" என்கிற நுண்ணுயிரியை ஒரு லிட்டர் நீரில் சுமார் 10 கோடி அளவு காணலாம்.

இவை உலகின் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

புவி வெப்பமயமாதலால், மழைக்காடுகளைப் போல இந்த பிளான்ங்டன்களும் கார்பன்-டை-ஆக்ஸைட் அதிகமாக வெளிவருவதால் அழியும் நிலையை எட்டியுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வை நடத்திவரும் ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் இந்த செய்தியை வெளியிட்டது. 

ஆறு அறிவுடன் நாம் இருப்பதால் இந்த உலகத்தை நாம் ஆள்கிறோம் என்று அர்த்தமல்ல! நாமும் இந்த பூமியின் ஒரு அங்கம். 

அதைக் காக்க வேண்டிய கடமை நமக்கும் உள்ளது. உலக மக்கள் எல்லோருக்கும் அவர்களது தாழ்மையான கோரிக்கை இதுவே!

பாரிஸில் வரும் நவம்பர் மாதம், 30-ம் தேதி முதல் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்குபெறும் அரசியல்வாதிகளிடமும் இந்த கார்பன் குறைப்புப் பிரச்சனை தொடர்பாக பேசப்பட இருக்கிறது.

இவை குறைக்கப்பட்டால் ஓரளவுக்கு பூமிக்கு ஏற்பட இருக்கும் அழிவு தள்ளி வைக்கப்படும்.

இன்னொரு பூமி இதுவரைக் கிடைக்கவில்லை..அதுவரை இருக்கும் பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வோமே..!

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து