Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

சென்னையில் இன்டர்நெட் விபச்சாரம்

[ வியாழக்கிழமை, 30 மே, 2013, ]
சென்னையில் இன்டர்நெட்
சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரி பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பின் போது இணையதளத்தில் கவர்சிகரமான விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை பிடிக்கும் ஒரு கும்பலை காவல்துறையினர் கவனித்தனர். அவர்களை பிடிக்க வாடிக்கையாளரை போல காவல்துறையினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர்.காவல்துறையினர் எதிர்பார்த்தபடி, இணையதள விபச்சார புரோக்கரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. காவல்துறையினரும் வாடிக்கையாளர் போல பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த இரண்டு விபச்சார தரகர்களையும், இரு இளம்பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விபச்சாரம் செய்த தரகர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விபச்சாரத் தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  ஆந்திராவில் கடும் வெயில் : பலியானோர் எண்ணிக்கை 852 ஆக உயர்வு..!  (26/05/2015) 
  கறுப்பு பணத்தை பதுக்கிய 5 இந்தியர்கள் : பட்டியலை வெளியிட்ட சுவிஸ் வங்கி..!  (26/05/2015) 
  இந்தியாவை மிரட்டும் ஆந்த்ராக்ஸ் நோய் : 40 பேருக்கு பரவியிருக்கும் என அச்சம்..!  (26/05/2015) 
  சப்பாத்தின் நூலை கட்டிவிட்ட போலீஸ்காரர் : சர்ச்சையில் சிக்கிய மேற்குவங்க அமைச்சர்..!  (26/05/2015) 
  உ.பி யில் ரெயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி : பலர் படுகாயம்..!  (25/05/2015) 
  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது மேல் முறையீடு : கருணாநிதி அறிவிப்பு..!  (25/05/2015) 
Published news:
  16 ஆண்டுகளாக வாடாமல் கோவில் ஒன்றில் புதைந்திருந்த அரளி மலர்கள்..!  (21/05/2015)
  மகாராஷ்டிராவில் மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த காவலாளி மற்றும் சமையல் காரன்..!  (21/05/2015)
  மும்பை தாக்குதலானது கடவுளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் : அல்-கொய்தா அறிவிப்பு..!  (21/05/2015)
  படிப்பில் பாதிப்பை உண்டாக்கும் உப்பு கலப்பு : மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை..!  (20/05/2015)
  திருமண விழாவில் மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி : பெரும் பரபரப்பு..! (வீடியோ இணைப்பு)  (20/05/2015)
  36 வயதினிலே படம் பார்த்து வேலையை இழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!  (20/05/2015)